Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

விஜயகுமாருக்கும் பொழுது போகணும்ல?

விஜயகுமார் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி சில வருஷங்கள் ஆச்சு. எப்போது சினிமாவில் பஞ்சாயத்து காட்சிகள் குறைந்தனவோ, அப்பவே விஜயகுமாரின் மார்கெட்டில் கடுமையான வறட்சி.

ஆலமரம், பஞ்சாயத்து சொம்பு என்றே பழக்கப்பட்டு போனவருக்கு, நடிகர் சங்கம் பக்கம் நிரந்தர நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்த சரத், ராதாரவி இடத்தை காலி பண்ணியது கூட பெரிய இழப்புதான். விஜயகுமாருக்கு போக்கிடம் என்று இருந்ததும் அந்த இடம்தானே? அப்பாவின் கவலையை ஆற அமர உணர்ந்த அவரது மகன் அருண்விஜய், மீண்டும் அவரை அரிதாரம் பூச வைத்திருக்கிறார். அவர் நடிக்கும் குற்றம் 23 படத்தில் விஜயகுமாருக்கு முக்கியமான ரோல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாம்.

மகன் தந்தைக்காற்றும் உதவி... என்று வைத்துக் கொண்டாலும், படத்தின் தயாரிப்பாளரே அருண் விஜய்தான் என்பதால், அவங்களே அவங்களுக்கு போட்டுக் கொண்ட நாற்காலி என்றும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்

comments powered by Disqus