Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

கபாலியும் டிக்கெட் களேபரமும்

நாடு முழுக்க கபாலி ஃபீவர்தான். சந்தோஷப்பட வேண்டிய தயாரிப்பாளர் தாணுவும், ஹீரோ ரஜினியும், டைரக்டர் பா.ரஞ்சித்தும் இவ்வளவு பரபரப்பையும் சற்று திகிலோடுதான் கவனிக்கிறார்களாம்.

“ஒரு படி மேலே போன தாணு, போதும்ப்பா... படத்துக்கு பப்ளிசிடி. எப்படியாவது ஸ்டாப் பண்ணுங்க” என்கிற அளவுக்கு போயிருக்கிறார். விளம்பரம் கேட்டு அவரது அலுவலகத்திற்கு போகிற எவருக்கும் கிடைக்கிற பதில், “ப்ளீஸ் கிளம்புறீங்களா?” என்பதுதான். அதையும் மீறி திரும்புகிற இடமெல்லாம் கபாலி கபாலி கோஷம்தான். சென்னையிலிருக்கிற ஐடி. நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பல முதல் மூன்று நாட்கள் டிக்கெட்டுகளை ‘லம்ப்’பாக வாங்கி தன் ஊழியர்களுக்கு வழங்கிவிட்டது. இது ஒருபுறமிருக்க, எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் வெளிப்படையாகவே பேஸ்புக்கில் வந்து எதிர்ப்பை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கபாலிக்கு ஆதரவான இன்னொரு தரப்போ, “இவிங்கதான்யா முதல்ல டிக்கெட்டுக்கு அடிச்சுப்பானுங்க” என்று பதிலடி கொடுக்க, கபாலியால் கண்ட கண்ட இடத்திலும் களேபரம்!  நெட் ரிசல்ட்? ரஜினிக்கு மேலும் ஒரு பிளாப் 

comments powered by Disqus