Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

சொதப்பினார் சூர்யா. கவலையில் சுந்தர்சி

என்னது... சுந்தர் சி 250 கோடி பட்ஜெட்ல தயாராகுற படத்தை இயக்குகிறாரா? என்னது... அந்த படத்திற்கு மியூசிக் ஏ.ஆர்.ரஹ்மானா?

என்னது... அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்குதா? என்னது... அந்த படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவும் நடிக்கிறாரா? ஆமாய்யா ஆமாம்! அவ்வளவும் உண்மை. ஆனால் விவகாரம் இல்லாமல் வெள்ளாமை ஏது? படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்ட சூர்யா, இப்போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாராம். நான் மட்டும்தான் இந்தப்படத்தில் ஹீரோன்னு நினைச்சேன்.

இப்போ மகேஷ்பாபுவும் ஒரு ஹீரோன்னா நான் யோசிக்கணும் என்கிறாராம். வெறும் சூர்யாவை நம்பி 250 கோடியை இறக்க தேனாண்டாள் என்ன திருவிழா சர்பத்தா? போட்ட பணத்தை எடுக்கணும்னா, வேறொரு லாங்குவேஜ்லேயும் கடை விரிச்சாதானே முடியும்? பேச்சு வார்த்தை நாலைந்து கட்டமாக நடந்து கொண்டேயிருக்கிறது. நடக்குமா நடக்குமா?

comments powered by Disqus