Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

பெரிய்.....ய நடிகருக்கு பெரிய்....ய பிரச்சனை

அந்த பெரிய்....ய படத்தில் நடித்த பெரிய்...ய நடிகருக்கு வெளியில் சொல்ல முடியாத கோபமாம். ஏன்? படத்தின் முக்கால்வாசி ஏரியா வேறொரு நாட்டில் எடுக்கப்பட்டது.

இப்படியொரு பெரிய படத்தை பெரிய அளவில் எடுத்தால், பெரிய்....ய தொகை கொடுத்து உதவுமாம் அந்த நாடு. சப்சீடி என்று சொல்லப்படுகிற இந்த தொகை கிட்டதட்ட நாற்பது சி என்கிறார்கள். பெரிய்....ய சம்பளத்தை முன் கூட்டியே வாங்கிவிட்ட அந்த ஹீரோ, இப்போது அந்த சப்சீடியான நாற்பதிலும் பங்கு கேட்பதால் நொந்தே போயிருக்கிறாராம் தயாரிப்பாளர்.

நடுவில் ஒரு பெரிய மனிதரை வைத்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல். எப்படியும் உருவாமல் விட மாட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். குல தெய்வத்தை நம்பிதான் கோழியடிக்கிறீங்க, அதே குலதெய்வம் கூடக் குறைய கேட்டால் கொடுத்துட்டு போக வேண்டியதுதானே.

comments powered by Disqus