Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஹீரோயின்கள்? -விஜய்யால் வரும் தலைவலி

இனிமேல் விஜய்க்கு கதை சொல்லிக் கூட அவரை சம்மதிக்க வைத்துவிடலாம். அவருக்கு ஹீரோயின்கள் பிடிப்பதற்குள் உள் நாக்கு மறைஞ்சு, வெளிநாக்கு கரைஞ்சுரும் போலிருக்கே என்று தவிக்க ஆரம்பித்துவிட்டார்கள் இயக்குனர்கள்.

நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா, அனுஷ்கா இவர்கள் நால்வருக்கும் தன் அரியணையில் துளி செ.மீ. கூட இடம் இல்லை என்று ஓப்பனாகவே கூறிவிடுகிறாராம் அவர்களிடம். இவர்களை தாண்டிய மார்க்கட்டபுள் ஹீரோயின்களை பிடிக்க அலையாய் அலையும் மேற்படி இயக்குனர்கள், சற்றே லெவல் மீறிய ஹீரோயின்களை சொன்னால், அதற்கும் சம்மதிப்பதில்லையாம் அவர்.

கீர்த்தி சுரேஷை எத்தனை படத்திற்கு ஜோடியாக நடிக்க வைக்க முடியும்? மஞ்சிமா மோகன், மடோனா என்று சொன்னால் கூட, அவரது நெற்றிக் கண் திறந்து கொள்வதால் பேஸ்த் அடித்துப் போய் கிடக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். பிரம்மனே புதுசா செஞ்சாதான் உண்டு!

comments powered by Disqus