Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஆர்யாவின் நிலைமை இப்படியாகிருச்சே?

பழைய நினைப்புடா... பேராண்டி பழைய நினைப்புடா என்று யாராவது முன்னாள் ரோமியோக்கள் நயன்தாராவுக்கு தூது விட்டால், த்தூ... த்தூதான் போலிருக்கிறது. அண்மையில் அந்த மகானுபவத்தை அடைந்தவர் ஆர்யா!

தப்பு தப்பான பிராஜக்டுகளில் கமிட் பண்ணி என் லைஃப்பை நானே சறுக்கிக்கிட்டேன். இனி உஷாரா இருப்பேன். வருஷத்துக்கு ரெண்டு படம் வந்தா கூட போதும். அதை சரியா செய்யணும் என்று புது முடிவெடுத்திருக்கிறார் ஆர்யா. மிகவும் சீரியஸ் ஆன ரோல்களில் நடிப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறாராம். (நான் கடவுள் எக்சாம்பிள்)

இந்த நிலையில்தான் அவர் கமிட் ஆகியிருக்கும் புதுப்படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை கேட்டார்களாம். “நான் வாங்குற சம்பளத்தில் பாதி கூட வாங்குறதில்ல அவர். நான் அவர் கூட நடிக்கணுமா?” என்றாராம் நயன்தாரா. பிரச்சனை சம்பளத்தில் இல்லை, அந்தஸ்தில் இல்லை என்பது ஊர் உலகத்திற்கு தெரிந்திருந்தும், அந்த உள் குத்தை அறிந்து கொள்ள முடியாமல் ரிட்டர்ன் ஆனார்களாம் ஆர்யாவுக்காக கால்ஷீட் கேட்டு போனவர்கள்! சினிமாடா....

comments powered by Disqus