முதல்ல லீவு போடாம வர்றீங்களா பார்ப்போம் சிம்பு
- Friday, 15 July 2016 16:41
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு ஒரு வித்தியாசமான யோசனையை சொன்னாராம் சிம்பு.
படத்தின் ஹீரோ இவர்தான் என்பதால், வாய் மூடி மவுனியாக கேட்டுக் கொண்டதாம் படக்குழு. அதாவது இந்த படத்தை வழக்கமா இரண்டேகால் மணிக்குள்ள முடிக்க வேண்டாம். நல்லா மூணு மூன்றரை மணி நேரம் எடுப்போம். படத்திற்கு இரண்டு முறை இன்டர்வெல் விடட்டும்.
கொடுத்த காசுக்கு ஜனங்க முழுசா உட்கார்ந்து ரசிச்சிட்டு போகட்டுமே என்றாராம். இதிலிருக்கும் நடைமுறை சிக்கல்கள் ஏதும் தெரியாமல் தம்பி பினாத்துதே என்று தயாரிப்பாளர் தரப்பு நினைத்தாலும் இப்போதைக்கு சரி என்று சொல்லியிருக்கிறார்களாம். அதெல்லாம் சரிதான். முதல்ல பதினைந்து நாள் ஷுட்டிங்குக்கு லீவு விடாம வர முடியுமா பாருங்க சிம்பு என்கிற சிலம்பரசன் என்கிற எஸ்.டி.ஆர். அப்புறம் பார்க்கலாம் இழுக்கறதா குறைக்கறதா என்று?