Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

கார்த்திக் சுப்புராஜுக்கு சரியான பாடம் சொன்ன தனுஷ்

நம்பி வாங்கிய விநியோகஸ்தர்கள் அத்தனை பேருக்கும் நாமத்தை பலமாக சார்த்திய படம் இறைவி. ஆனால் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு அந்த கவலை துளி கூட இருப்பது போல தெரியவில்லை.

வழக்கம் போல ட்விட்டரில் உற்சாக ட்விட்டுகளை போட்டுத் தள்ளுகிறார். ஆனால் விதி சும்மாயிருக்குமா? இறைவி படத்தில் இவர் எந்த தயாரிப்பாளரை மனதில் வைத்துக் கொண்டு கேவலப்படுத்தினாரோ? அதே தயாரிப்பாளருக்கு படம் பண்றீங்களா, கால்ஷீட் தர்றேன் என்று தனுஷ் சொன்னால் எப்படியிருக்கும்? விளக்கெண்ணை குடித்தது போலாகிவிட்டாராம் கா.சு.ரா. தன் ஆபிசிலேயே எந்நேரமும் குடி கொண்டிருக்கும் இவரை விரட்ட வழி தெரியாத தனுஷ், நான் மேற்படி தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன்.

அந்த படத்தை வேணும்னா நீங்க இயக்குங்களேன் என்று கேட்க, ஏற்கனவே அவருக்கும் இவருக்கும் கட்டி உருளாத ஒரு பானிப்பட்டு போர் நடந்து வருவதால், என்ன பதில் சொல்வது என்று தடுமாறிவிட்டாராம் இவர். விருந்து வச்ச மாதிரியும் ஆச்சு. இலையை மூடுன மாதிரியும் ஆச்சு. என்னே தனுஷ் ட்ரிக்?

comments powered by Disqus