அம்மாவை கண்டதும் ஸ்கூல் பிள்ளைகள் வாசலிலேயே ஓ வென்று அழுமே... அப்படி அழ ஆரம்பித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
ரஜினி வரவுக்காகவே காத்திருந்தவர்கள், தலைவா... இப்படி அநியாயம் நடந்திருச்சே. அதை கேட்க மாட்டியா என்கிற பொருள்படும்படி ஆங்காங்கே போஸ்டர் அடித்து அமர்க்களப்படுத்திவிட்டார்கள். ஒரே ஒரு பிரச்சனைதான் எல்லாவற்றுக்கும் காரணம். ரசிகர் மன்ற டிக்கெட்டுகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. முதல் மூன்று நாட்களும் ஐடி பார்க் ஊழியர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுவிட்டது. சென்னை காசி தியேட்டரில் வானுயர பேனர் வைத்த ரசிகர்கள், தங்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதும் அந்த பேனரையே அவிழ்த்துக் கொண்டு போன அவலமும் நடந்தது. “எங்களுக்கே டிக்கெட் இல்ல. அப்புறம் எங்க பேனர் மட்டும் வேணுமா, போய்யா...
தலைவர் ஊர்ல இருந்து வந்ததும் பேசிக்கிறோம்” என்று கலைந்தார்கள். சொன்னபடியே ரஜினி சென்னை திரும்பியதும், நாங்க ஏமாற்றப்பட்டோம் தலைவா. நியாயத்தை நீ கேளு என்று போஸ்டர் அடித்து போயஸ் கார்டன் ஏரியாவில் ஒட்டிவிட்டார்கள். ரஜினி பார்க்கணுமே? பார்த்தாலும், பிரச்சனையை தட்டிக் கேட்கணுமே? இந்த நேரத்தில்தான் அந்த இனிய தகவல். கபாலி பார்ட் 2 தயாரிக்கிற பாக்கியம் கிடைத்தால் மகிழ்வேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.