சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி
பின்னர் ஜார்ஜியாவில் 8 நாள்கள் நடந்து முடிந்தது. கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் முற்றாக குறைந்தவுடன், சென்னையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை நடத்தலாம் அதுவரை பொறுமை காப்போம் என்ற விஜய்யின் கோரிக்கையை தயாரிப்புத் தரப்பினர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து மற்ற துணை கதாபாத்திரங்களுக்கு நடிகர்களைத் தேர்வு செய்வது உட்பட படத்தின் மற்ற பணிகளை முடிக்க இயக்குநர் நெல்சன் தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக சன் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து தற்போது இந்தப் படத்தின் இரண்டு முக்கிய வில்லன்களில் ஒருவராக பிரபல இயக்குநர் செல்வராகவன் நடிக்கவிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் வட்டாரத்திலிருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லையென்றாலும் தன்னிடம் நெல்சன் கதையையும் கதாபாத்திரத்தையும் கூறி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செல்வராகவன் தரப்பிலிருந்தும் தகவல் கசிகிறது. கீர்த்தி சுரேஷுடன் இணைந்து 'சாணிக் காயிதம்' என்ற படத்தில் செல்வராகவன் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்