கலைப்புலி தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் வெளியான‘அசுரன்' படத்தைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
எல்ரெட் குமார், வெற்றிமாறன் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. இதுவரை சுமார் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. சூரி கதாநாயகனாக நடித்தாலும் அவருடைய வாத்தியாராக அதாவது வழிகாட்டுநராக விஜய்சேதுபதி முக்கியக் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.
'விடுதலை' எனப் பெயரிடப்பட்டு, அந்தப் படத்தின் முதல் தோற்றத்தை விஜய்சேதுபதி இன்று வெளியிட்டார் படக்குழு. இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் ‘வாடிவாசல்’ படத்தை தொடங்குகிறார் வெற்றிமாறன்.