Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

நியாயமான விலைக்கு விற்கப்படுமா கபாலி பட டிக்கெட்?

ரஜினி ரசிகர்கள் எவ்வளவு விலைக் கொடுத்தேனும் கபாலி திரைப்படத்தைக் காண தயாராக இருக்கும் நிலையில், சினிமா ரசிகர்கள் நியாயமான விலைக்கு விற்கப்படுமா கபாலி பட டிக்கெட் என்கிற கவலையில் உள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படம், ஜூலை 22-ம் திகதி வெளியாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு படத்தை அனுப்பி வைக்க தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன..இதனிடையே படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது பல்வேறு திரையரங்குகளில் தொடங்கப்பட்டு இருக்கிறது. சென்னை சத்யம் திரையரங்கில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அனைத்து டிக்கெட்களுமே விற்றுத் தீர்ந்தன.

மேலும், பல ஊர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில், சில திரையரங்குகளில் விலை என்ன என்பதை பிரின்ட் செய்யாமலேயே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது.

டிக்கெட் விலை இல்லை என்பதால் என்ன விலை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான் இதற்கு காரணமாம். கபாலி படத்தின் டிக்கெட் விலையைக் கேட்டுவிட்டு பலரும், என்ன இவ்வளவு விலையா என்று தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். ஏற்கெனவே, #'வேதாளம்' படத்துக்கு அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக புகார் எழுந்து நீதிமன்றம் வரை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விற்கப்பட வேண்டும். குறிப்பாக, முக்கிய நட்சத்திரங்களின் படங்களின் வெளியாகும்போது கண்காணிப்பு அவசியம் என்று சினிமா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். சென்னை உயர் நீதிமன்றமும் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளை வலியுறுத்தி உள்ளது.

தெறி திரைப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணு அதிக விலை கேட்கிறார் என்று சர்ச்சையானது. இதனால் செங்கல்பட்டு விநியோக ஏரியாவில் அப்படம் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட பின்பே அங்கு வெளியானது. இதே சூழல் தற்போது 'கபாலி' படத்துக்கும் ஏற்பட்டு இருக்கிறது.மிக்கது தீவிர பேச்சுவார்த்தை செங்கல்பட்டு திரைப்பட உரிமையாளர்களுடன் தாணு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே செங்கல்பட்டு பகுதியில் கபாலி திரைப்படம் வெளியிடப்படும்.

comments powered by Disqus